விழிப்புணர்வு வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |4 Nov 2024 7:08 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண்மை துறையின் சார்பாக 2024-25 ஆம் ஆண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (ஊட்டமிகு சிறுதானியங்கள்) இயக்கத்தின் கீழ் சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை மற்றும் குதிரைவாலி ஆகியவற்றின் சாகுபடி தொழிநுட்பங்கள், மருத்துவ பயன்கள்,மதிப்பு கூட்டுதல் பற்றி நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி 04.11.2024 அன்று முதல் 09.11.2024 வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) குறித்த விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் இன்று (4.11.2024) நாமக்கல், எருமப்பட்டி மற்றும் மோகனூரிலும், 5.11.2024 அன்று மோகனூர், பரமத்தி, கபிலர்மலையிலும், 6.11.2024 அன்று திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையத்திலும், 7.11.2024 அன்று எலச்சிபாளையம், புதுச்சத்திரம், சேந்தமங்கலத்திலும், 8.11.2024 அன்று கொல்லிமலை, மல்லசமுத்திரம், வெண்ணந்துரிலும், 9.11.2024 அன்று வெண்ணந்தூர், இராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட் நிலஎடுப்பு) சரவணன், வேளாண் துணை இயக்குநர்கள் ப.கவிதா (மாநில திட்டம்), கோவிந்த் ராஜ் (உழவர் பயிற்சி நிலையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமசந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story