ஆடு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது பரமத்தி வேலூரில் பரபரப்பு.
Namakkal (Off) King 24x7 |5 Nov 2024 9:14 AM GMT
பரமத்திவேலூர் நல்லியம்பாளையம் புதூரில் ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கால் தாலுகா நல்லியம்பாளையம் புதரைச் சேர்ந்தவர் விவசாயி காசிமணி வயது 58 தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார் இவர் தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக நாமக்கல் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் கடந்த இரண்டாம் தேதி சென்று விட்டு மூன்றாம் தேதி வீடு திரும்பியுள்ளார் அப்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் காணாமல் போனது தெரிய வந்தது ஆடுகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காசி மணி பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் இந்த புகார் அடிப்படையில் நேற்று மாலை மோகனூர் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டபோது மோகனூர் சாலையில் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு ஆடுகளை வைத்துக் நின்று கொண்டிருந்தனர் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஒருவர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார் மற்ற இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் சார்வையின் போது நல்லியம்பாளையம் புதூரில் ஆடுகளை திருடியது தெரிய வந்தது ஆடுகளை திருடியவர்கள் பரமத்தி வேலூர் பிச்சிப்பாளையம் அருகே உள்ள சிலோன் தெருவை சேர்ந்த பிரேம்குமார் வயது 19 குச்சிபாளையம் அருகே உள்ள ஒலுகூர் பட்டியைச் சேர்ந்த காவக்காரன் வயது 19 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் இரண்டு ஆடுகளை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது போலீஸாரிடம் தப்பி ஓடிய மற்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story