கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளை முன்னிட்டு பச்சை சாத்தி அலங்காரத்தில் காட்சித் தந்த முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது

கந்த சஷ்டி
தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நான்காம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத வடிவழகர் முருகப்பெருமானுக்கு வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார் அதனைத் தொடர்ந்து உற்சவர் முருகப் பெருமானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார் முருகப்பெருமானுக்கு பின்புறத்தில் நடராஜரும் காட்சி தர பெண்கள் கந்த சஷ்டி பாடல்களை பாடி முருகப்பெருமானை வழிப்பட தொடங்கினர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை நட்சத்திர தீப ஆராதனை காட்டப்பட்டு சோடாச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் உற்சவர் சப்பர வாகனத்தில் அமர்த்தப்பட்டு நான்கு மாட வீதியில் திருவீதி உலா வருகை தந்து பின் கோயிலை அடைந்தார் இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை கண்டு தரிசித்துச் சென்றனர்
Next Story