ஐயப்ப சேவா சங்க  மத்திய நிர்வாகிக்கு பாராட்டு

ஐயப்ப சேவா சங்க  மத்திய நிர்வாகிக்கு பாராட்டு
ஐயப்ப சேவா சங்க மத்திய நிர்வாகிக்கு குமாரபாளையத்தில் பாராட்டு விழா நடந்தது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய பொது தேர்தல் மத்திய சங்க தலைவர் வழக்கறிஞர் ஐயப்பன் தலைமையில் நடந்தது. புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த சங்கீத் குமார், பொதுச் செயலாளராக  வழக்கறிஞர் செங்கனூர் விஜயகுமார்,  பொருளாளராக  கிருஷ்ணன் நாயர், புரவலராக  சென்னை ஐயப்பன், நாமக்கல் மாவட்டத்தின்  சார்பாக மத்திய துணைத் தலைவராக  பாலசுப்பிரமணியம், மத்திய செயற்குழு உறுப்பினராக   ஜெகதீஷ் உள்ளிட்ட பலர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதில் மத்திய செயற்குழு உறுப்பினராக  தேர்வு செய்யப்பட்டவரும், தளபதி லயன்ஸ் சங்க பட்டய தலைவருமான  குமாரபாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ்க்கு பாராட்டு விழா நடந்தது. தளபதி லயன்ஸ் சங்க மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஜெகதீஷ்க்கு மாலைகள் மற்றும் சால்வை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. சண்முகசுந்தரம் பேசியதாவது: ஜெகதீஷ்க்கு இந்த பதவி மிகவும் பொருத்தம். ஆண்டுதோறும் சபரிமலையில் சேவை செய்வதற்காக ஆயிரத்திற்கும் மேலான கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களை தன் சொந்த செலவில் சபரி மலைக்கு அனுப்பி சேவை செய்து வருகிறார். அங்கு நடைபெறும் அன்னதான சேவையிலும் சீசன் முடியும் வரை உதவி வருகிறார். குமாரபாளையத்தில் மண்டல பூஜைகள் நடத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்பன் திருவீதி உலா, ஆயிரத்திற்கும் மேலான பெண்களுக்கு புதிய விளக்குகள் வழங்கி, அந்த திருவிளக்குகளுடனும்,   யானை, குதிரைகளுடன்,  திருவிளக்கு ஊர்வலம், சபரிமலை போன்று ஆபரண பெட்டி, கற்பூர ஆழியுடன்  நடத்தி வருகிறார். பொதுமக்கள் பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். கொரானா சமயத்தில் இவர் செய்த அன்னதான சேவை ஊர் மக்கள் அனைவரும் அறிவர். லயன்ஸ் சங்க சேவையில் ஒரு ஆண்டில் 210 இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தினார். 46 ஆயிரத்து 368 வெளி நோயாளிகள் பங்கேற்றதில், 8 ஆயிரத்து 935 நபர்களுக்கு ஐ.ஓ.எல். லென்ஸ் வைக்கும் அறுவை சிகிச்சை செய்து, கின்னஸ் சாதனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், பொதுச்செயலர் சிவராமன், சங்க தலைவர் கதிர்வேலு, நிர்வாகிகள்  கோகுல்நாத், செல்லவேல்  உள்பட பெரும்பாலோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story