நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!
பொது மக்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க நாமக்கல் மாநகராட்சியில் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் (Toll Free Number) 1800-599-7990 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, குப்பை அகற்றுதல், கழிப்பிட வசதிகள், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் ஆகிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது தேவைகளை தெரிவிக்க நாமக்கல் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. பொது மக்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க
நாமக்கல் மாநகராட்சியில் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் (Toll Free Number) 1800-599-7990 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள குறைகளை சரி செய்யவும் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் பாதிப்புகள் உள்ளதை சரி செய்யவும் நாமக்கல் மாநகராட்சி கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் (Toll Free Number) 1800-599-7990-ஐ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை பதிவு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story