மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை!
Thoothukudi King 24x7 |6 Nov 2024 5:11 AM GMT
ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமங்கலைச் சேர்ந்தவர் தேவராஜ். இருடைய 15 வயது மகள், பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால் மனமுடைந்த அவர், நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story