வன்னியர் சங்கத்தை தரக்குறைவாக பேசிய விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் பாமக கட்சியினர் மனு!

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் வன்னியர் சங்கத்தை தரக்குறைவாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக கட்சியினர் மனு அளித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்கத்தையும் தரக்குறைவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு! கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடந்த 4ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி குறித்தும்  ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பேசி உள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சமூகத்தினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு வித்திட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன் , பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமியை நேரில் சந்தித்து புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நீதி வள்ளல் , அரங்க தமிழ்ஒளி , அறிவுடை நம்பி ,  செல்வராணி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் , வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன் , தலைவர் பொன்னுச்சாமி , தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் தங்கராஜ் ,  தலைவர் ரமேஷ் , பல்லடம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மணி கண்ணன் ,  வழக்கறிஞர் பிரிவு தலைவர் சபாஷ் , பல்லடம் காளியப்பன் ,  ஜே பி ராஜேந்திரன் , புருஷோத்தமன் , மாதப்பூர் கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Next Story