வெங்கமேடு அருகே மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
Karur King 24x7 |6 Nov 2024 1:11 PM GMT
வெங்கமேடு அருகே மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
வெங்கமேடு அருகே மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வெங்கமேடு புதுக்குளத்து பாளையம், காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் ஸ்ரீநிவாசன் வயது 55. மேலே கண்ட விலாசத்தில் இவர் கடந்த 7- வருடங்களாக வசித்து வந்தார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி இரவு 9 :10-மணி அளவில் வெங்கமேடு ஆதித்யா பேக்கரி அருகே நடந்து சென்றவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீநிவாசன் சிகிச்சை பலனின்றி நேற்று நவம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு, இனாம் கரூர் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெங்கமேடு காவல்துறையினர், உயிரிழந்த ஸ்ரீநிவாசன் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, அவரது உறவினர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story