பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ராசிபுரம் டிஎஸ்பி இடம் நிர்வாகிகள் மனு..
Rasipuram King 24x7 |6 Nov 2024 1:48 PM GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ராசிபுரம் டிஎஸ்பி இடம் நிர்வாகிகள் மனு..
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் இடம் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஓ பி பொன்னுசாமி மனு வழங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட சார்பில் ராசிபுரம் டி எஸ் பி இடம் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள் மொழிக்கு கடலூர் மாவட்ட பாமக செயலாளர் கொலை மிரட்டல் விடுத்த விசிக கட்சியை சேர்ந்த நான்கு நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஓ பி பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் ராசிபுரம் வார்டு உறுப்பினர், மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாணவர் அணி தலைவர் வடிவேல், மற்றும் மாநில மாணவர் அணி பாலு, .பாமக ஊராட்சி ஒன்றிய தலைவர் பெரியசாமி. வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் குணசேகரன், பழனிசாமி, வடிவேல், பூக்கடை மாது, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
Next Story