உடுமலை அருகே நெற்பயிர்களில் தண்டுப்புழு தாக்குதல்

இழப்பீடு வழங்க கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம் ராம் குளம் வாய்க்கால்கள் நேரடி பாசன பகுதியில் 1100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் அறுவடைக்கு 15 நாட்கள் உள்ள நிலையில் தற்பொழுது தண்டு புழுக்கள் தாக்கி அளித்து வருகின்றன எனவே ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story