பட்டு நூல் எடுக்கும் ஆலையால் நிலத்தடி நீர் பாதிப்பு வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு.
Bhavanisagar King 24x7 |7 Nov 2024 12:52 AM GMT
பட்டு நூல் எடுக்கும் ஆலையால் நிலத்தடி நீர் பாதிப்பு வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு.
பட்டு நூல் எடுக்கும் ஆலையால் நிலத்தடி நீர் பாதிப்பு வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மலையடி புதூர் கிராமம் காரணை புதூரில் ஸ்ரீ சுபத்ரா சில்க் ரிவர்ஸ் எனும் பட்டு நூல் எடுக்கும் ஆளை கழிவுநீர் வெளியேற்றுவதால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர்நிலைகள் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் எதிர்ப்பின் காரணமாக இந்த ஆளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது மீண்டும் கடந்த ஐந்து மாதங்களாக இயங்கி வருகிறது இதனால் முன்பு இருந்ததை விட கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்களும் நேரில் ஆலைக்கு சென்று பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக ஆலை நிறுத்த கோரி சத்தி வட்டாட்சியர் அவர்களிடமும். கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story