மின்வெட்டு கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Komarapalayam King 24x7 |7 Nov 2024 11:56 AM GMT
குமாரபாளையத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கண்டித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சி.ஐ.டி.யு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரத்தில் வடக்கு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இதனை கண்டித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சி.ஐ.டி.யு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் நகரத் தலைவர் சரவணன் தலைமையில், சின்னப்பநாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் அசோகன் பங்கேற்று ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசே, இந்த மின்வெட்டை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டு நடைபெற்றால், பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கு அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஒரு வாரத்திற்கு 450 ரூபாய் என்றால் மாதத்திற்கு ஆயிரத்து 800 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது எனவே இந்த மின்வெட்டை தமிழக அரசு உடனடியாக சரி செய்து மின்வெட்டு இல்லாத பகுதியாக மாற்றி கொடுக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஏன் இப்படி நீடிக்கிறது? என்று கேட்டால் பூமிக்கு அடியில் மின் இணைப்பு கம்பிகளை பதித்ததினுடைய விளைவாக பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான பாதிப்புகள் தொடரப்படுகிறது என கூறி மின்வாரியத்தினர் சமாதானம் செய்கிறார்கள். இதனை சரி செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. இவ்வாறு இவர் பேசினார். உதவி செயலாளர் மோகன், நகர பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் பாலுசாமி, அவர்களும்அவர்களும் வாழ்த்துரை வழங்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story