வெள்ளகோவில் அருகே சித்தர் சமாதியில் சிறப்பு வழிபாடு

காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் சேனாபதிபாளையம் ஊராட்சி  மூத்தநாயக்கன்வலசில்  சித்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழிபாடு
காங்கேயம் வெள்ளகோவில் அடுத்துள்ள  சேனாபதி பாளையம் ஊராட்சி  மூத்தநாயக்கன்வலசில் வசித்து வந்தவர் பழனிசாமி கவுண்டர் @  மூத்தநாயக்கன்வலசு பூசாரி (86 வயது) வசித்துவந்தார். இவருக்கு நாச்சம்மாள் என்ற மனைவியும் தங்கவேல் என்ற மகன் இருந்தனர். மேலும் இவர் வெள்ளகோவில் வீரகுமாரா சுவாமி கோவிலின் தீவிர பக்தர் ஆவார். வீரகுமார கோவில் தலைவராகவும் பொதுமக்களுக்கு குறி சொல்வது @ சாமி ஆடி வாக்குகள் சொல்லி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2013 ஆண்டு கந்தசஷ்டி தினத்தில் வயது மூப்பின் காரணமாக இயற்க்கை எய்தினார். பின்னர் இவரின் உடலை அடக்கம் செய்து சமாதியாக கட்டி பராமரித்து வந்தனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இவர் சமாதியில் மண்டபம் கட்டி திருவுருவ சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.  அவரின் இறந்த தினத்தில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடுப்பதினார் மற்றும் ஊர் பொதுமக்கள் வழிபட்டனர். பூஜை முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story