வக்கீல் வெட்டி எரித்து கொலை கொலையாளி போலீசில் சரண்
Nagercoil King 24x7 |8 Nov 2024 5:02 AM GMT
நாகர்கோவில் அருகே
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பீமாநகரி மண் ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள குளக்கரையில் இன்று காலை எரிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக நேற்று ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் சோபி (55) என்பதும் வக்கீலாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதற்கிடையில் பீமநகரியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஆரல்வாய் போலீசில் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்தது நான் தான் என்று சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், - இசக்கி முத்து அவரது சொத்து தொடர்பான வழக்கு நடத்துவதற்கு வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை அணுகியிருக்கிறார். இசக்கிமுத்துவுடன் இருந்து வக்கீல் அடிக்கடி பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கு சரியாக நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இசக்கி முத்து கொடுத்த சொத்து ஆவணங்களை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் ஆவணங்களை கிறிஸ்டோபர் சோபி கொடுக்கவில்லை. இதனால் இசக்கி முத்து வக்கீல் கிறிஸ்டோபர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை வெட்டி கொலை செய்துவிட்டு அவரது உடலை அங்கிருந்து தரதரவென இழுத்து சென்று எரித்திருப்பது தெரியவந்தது. ஆரல்வாய்மொழி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை இசக்கி முத்து மட்டும்தான் செய்தாரா? அல்லது வேறு யாராவது சேர்ந்து கொலை செய்தார்களா? என்று கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story