கரூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
Karur King 24x7 |8 Nov 2024 8:14 AM GMT
கரூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
கரூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 2-ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பாக வள்ளி, தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமான் மணக்கோலத்தில் எழுந்தளினார். அப்போது சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டன. பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க ஆறுமுக பெருமான் திருமாங்கல்யத்தை அணிவித்து வள்ளி, தெய்வானையை ஏற்றுக்கொண்டார். அப்போது பக்தர்கள் அரோகரா.. கோஷம் எழுப்பி பூக்களை தூவி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கி வாழ்வில் சுபகாரியம் பிறக்கும் என்பது ஐதீகம் ஆகும். திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story