பழுதாகி நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

X
Pallipalayam King 24x7 |8 Nov 2024 5:24 PM ISTஅரசுப் பேருந்து பஞ்சராகி நின்றதால் பின் தொடர்ந்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து ஈரோடு நோக்கி செல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை என்று காலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக, அரசு பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நடு சாலையில் நின்றது. இதன் காரணமாக பேருந்து பயணிகள் அவதி அடைந்த நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மாற்று பேருந்தில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்நிலையில் மிகக் குறுகலான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் ,பின்புறம் வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ,பழுதாகி நின்ற அரசு பேருந்தை உரசும் வகையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. இதன் காரணமாக காலை நேரத்தில் பள்ளி ,கல்லூரி, பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
