இராசியும் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

இராசியும் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்
இராசியும் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசியும் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1)இராசிபுரம் நகர மன்ற கூட்டத்தில் அணைப்பாளையம் பேருந்து நிலையம் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றுவதை எதிர்த்து வெளிநடப்பு செய்த 1- வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் திருமதி T.மகாலட்சுமி 10-வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் திருமதி S.ஆராயி,12-வார்டு சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர் திருமதி.சசிரேகா அவர்களுக்கும் இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் சார்பிலும் இராசிபுரம் நகரமக்களின் சார்பிலும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். 2)ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்து தேர்ந்தெடுத்த இராசிபுரம் மக்களுக்கு துரோகம் செய்த நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 23 நகர்மன்ற உறுப்பினர்களை வன்மையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறது. 3)இராசிபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பேருந்து நிலைய மாற்றும் திட்டத்தை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது. 4)இராசிபுரம் எல்லையில் இணைந்திருக்கும் கட்டனாச்சம் பட்டி, புதுப்பாளையம்,பட்டணம் பேருராட்சி,இராசிபுரம் நகரத்தின் நுழைவாயிலாக விளங்ககூடிய ஆண்டகளூர் கேட் உள்ளடக்கிய குருக்கபுரம் ஊராட்சிகளை இணைக்ககாமல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவே அணைப்பாளையம், முருங்கப்பட்டி, சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம் முத்துக்காளிப்பட்டி கோணேரிபட்டி ஊராட்சிகளை இணைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து தமிழக அரசு குழு அமைத்து உரிய ஆய்வு நடத்தியும் மக்களின் கருத்தை கேட்டும் நகரவிரிவாக்க திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.ரியல்எஸ்டேட் நிறுவனத்தின் ஆதயத்திற்காகவே அறிவிக்கப்பட்ட எல்லை விரிவாக்கதிட்டத்தினால் இராசிபுரம் நகரம் 50 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படும். 5)இராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்கூட்டத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னெடுப்பதோடு அல்லாமல் மக்கள் மன்றத்திலும் போராட்டத்தை தீவிர படுத்துவது என தீர்மானிக்க பட்டது. 6) வருகின்ற 22/11/24 அன்று சென்னையில் குறளகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. மேற்படி உண்ணாவிரதத்தில் இராசிபுரம் பொதுமக்களும் வணிகர்களும் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ள படுகிறது. 7) பேருந்துநிலைய மாறுதலை இரத்து செய்யும் வரை தொடர்ந்துபோராட்டத்தை முன்னெடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story