ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ஆறுமுகசாமிக்கு திருக்கல்யாணம் வைபவம்
Rasipuram King 24x7 |8 Nov 2024 1:05 PM GMT
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ஆறுமுகசாமிக்கு திருக்கல்யாணம் வைபவம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் ஆலயம் உள்ளது.இக்கோவில் வல்வில் ஓரி மன்னரால் கட்டப்பட்டு திருக்கோவிலுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பாலசுப்பிரமணிசாமிக்கு தினம் தோறும் பல்வேறு அபிஷேகம் தீபாதாரணை நடைபெற்று வந்தது. நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆறுமுகசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story