பரமத்தி வேலூர் அருகே கடன் தொல்லையால் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை.
Paramathi Velur King 24x7 |8 Nov 2024 4:04 PM GMT
தி வேலூர் அருகே கடன் தொல்லியல் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், நவ.7நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் துலுகா பரமத்தி சுண்டப்பனை சாலையில் வசிப்பவர் கார்த்திக் (33). இவரது மனைவி பிருந்தா (30). கார்த்திக் சலுன் கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சனை காரணமாக கணவன்,மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கார்த்திக் கடந்த 5-ஆம் தேதி விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story