கோடங்கிபட்டி டெக்ஸ் பார்க்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காந்தி.

கோடங்கிபட்டி டெக்ஸ் பார்க்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காந்தி.
கோடங்கிபட்டி டெக்ஸ் பார்க்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காந்தி. வளர்ந்து வரும் கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. டெக்ஸ்டைல் தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோடங்கிப்பட்டி பகுதியில் தனியார் டெக்ஸ்டைல் பார்க்கில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக கைத்தறி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது டெக்ஸ்டைல் துறை சார்ந்த வல்லுநர்கள், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story