ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான நடைபெற்ற தேர்வு மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு.
Namakkal (Off) King 24x7 |9 Nov 2024 11:15 AM GMT
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர் ஆர்.சரவணக்குமார், (ஓய்வு) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேர்வு நடைபெறும் மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
நாமக்கல் மாநகராட்சி, நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டை உயர்நிலைப்பள்ளி, பி.ஜி.பி இன்டர்நேசனல் பள்ளி மற்றும் பி.ஜி.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர் ஆர்.சரவணக்குமார், , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை ஓ.எம்.ஆர் (OMR) மூலம் 887 நபர்களும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை ஓ.எம்.ஆர் (OMR) மூலம் 310 தேர்வர்கள் என மொத்தம் 1,197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்கென 4 தேர்வு மைங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்வினை கண்காணிக்க 4 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1 நடமாடும் குழு ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு போட்டித்தேர்வினை 580 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகைபுரியவில்லை. இந்த ஆய்வின் போது நாமக்கல் வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story