நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Namakkal King 24x7 |9 Nov 2024 12:15 PM GMT
நாளை (நவம்பர்-10) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் உமா புதிய பேருந்து நிலையத்தில் (நாளை 10.11.2024) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாளை (நவம்பர்-10) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடங்கள், கடைகள், உணவகங்கள், பயணிகள் காத்திருப்பு பகுதி, தாய்மார்கள் பாலுட்டும் அறை, ஓட்டுநர்கள் ஓய்வு அறை, நேரம் காப்பாளர் அறை, துப்புரவு பிரிவு அலுவலகம், காவலர் அறை, இருசக்கர, நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையத்தில் நாளை (நவம்பர் -10) ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி இயக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளின் நேர விபரங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்,கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அனைத்து புறநகர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதை போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.பொதுமக்களின் வசதிக்காக அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் முழுமையாக இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு உரிய கால இடைவெளியில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நாமக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் (வடக்கு) முருகேசன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜோதி குப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story