காக்காவாடி -பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்படும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலஜி, காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு.
Karur King 24x7 |9 Nov 2024 12:35 PM GMT
காக்காவாடி -பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்படும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலஜி, காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு.
காக்காவாடி -பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்படும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலஜி, காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். கோடங்கிபட்டி மற்றும் காக்காவாடி பகுதியில் அமைய உள்ள சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து காக்காவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர் என்ற தனியார் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யப்பட்டு, ஆடை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தொழிற்சாலையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு கட்டமாக எப்படி நூலாக தயார் செய்யப்படுகிறது என்ற முறைகளை பார்வையிட்டனர். முன்னதாக வெளிநாட்டு ஏற்றுமதி, ஆடைகள் விற்பனை மற்றும் வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் மூலம் ஆடைகள் தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பார்வையிட்ட பின்னர் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் பாட்டில்களில் பச்சை நிற பாட்டில்களை தவிர்க்க வேண்டும் என்றும், அதே போன்று பாட்டில்களில் பிவிசி லேபிள்களை தவிர்த்தால் மறுசுறிச்சி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்ற கோரிக்கையை ஆலை நிர்வாகத்தின் உரிமையாளர்கள் விடுத்துள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அமைச்சர்கள் அதேபோன்று இங்கு தயாரிக்கப்படும் ஜவுளி ரகங்களை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story