கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |9 Nov 2024 1:14 PM GMT
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் ஈரோடு சாலையில் உள்ள மெரிடியன் ஹோட்டல் கூட்டரங்கில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு செயலாளர் அமுதவல்லி,ஜவுளி துறை இயக்குனர் லலிதா, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, ஜவுளித்துறை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், இந்த கூட்டத்தில் ஜவுளித்துறை மேம்பாடு குறித்து பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், கோரிக்கைகளை ஜவுளி துறையினர் அமைச்சரிடம் மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story