விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி - தாய், மகன் மீது வழக்கு
Nagercoil King 24x7 |9 Nov 2024 4:10 PM GMT
திருவட்டாறில்
குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (40) டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகின்ற குமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்த சங்கர் மகன் லாசர் (27) அவரது தாயார் வனஜா (57) ஆகியோர் ஸ்டாலினிடம் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் 12 லட்சம் 52 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி பணி ஆணை நகலை கொடுத்து பணியில் சேருமாறு கூறியுள்ளனர். ஸ்டாலின் வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தை சென்று விசாரித்த போது அது போலி பணியாணை என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஸ்டாலின் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். இந்த நிலையில் மறுபடியும் தொடர்பு கொண்டு பேசிய லாசர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் சென்னையில் அரசு வேலை வாய்ப்பு தருவதாக கூறி, மீண்டும் போலியான பணி ஆணை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் திருவட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாசர் மற்றும் வனஜா ஆகிய இவர் மீது ஐந்து பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாய் மகனை விசாரிப்பதற்காக காஞ்சிபுரம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Next Story