இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் பறிமுதல்
Thoothukudi King 24x7 |10 Nov 2024 9:08 AM GMT
தூத்துக்குடி புதிய துறைமுகம் கோவளம் கடற்கரை பகுதியில் இருந்து பைபர் படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான 65 பண்டல்களில் இருந்த 2000 கிலோ பீடி இலைகள் பறிமுதல் க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள் மஞ்சள் பூச்சி மருந்து அழகுப்பொருட்கள் கடல் அட்டை போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது இதை தடுக்கும் வகையில் அவ்வப்பொழுது க்யூப் பிரிவு காவல் துறையினர் கடல் கடல் காவல் நிலைய போலீசார் மற்றும் சுங்கலகாவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக க்யூப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து கியூ பிரிவு காவல்துறையினர் சோதனை செய்ததில் அங்கு கடற்கரை அருகே முட்புதரில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான 65 பண்டல்களில் இருந்த 2000 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர் மேலும் இந்த கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story