நாமக்கல்: முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம் இன்று இயக்கம்.
Namakkal (Off) King 24x7 |10 Nov 2024 11:33 AM GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மேயர் து.கலாநிதி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.10.2024 அன்று நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் 51 பேருந்து நிறுத்தங்கள், 57 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பு பகுதி, 1 தாய்மார்கள் பாலுட்டும் அறை, 1 ஓட்டுநர்கள் ஓய்வு அறை, 1 நேரம் காப்பாளர் அறை, 1 பொருள் வைப்பு அறை, 1 துப்புரவு பிரிவு அலுவலகம், 1 மின்வாரிய அறை, 2 ஏ.டி.எம், 1 காவலர் அறை, 1 பொது சேவை பிரிவு, 200 எண்ணிக்கை இருசக்கர வாகனங்க்ள, 60 எண்ணிக்கை நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்து புறநகர் பேருந்துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு உரிய கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி, போக்குவரத்துத்துறையினர் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி அறிவு சார் மையத்தில் பயின்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 9 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் போது துணை மேயர் செ.பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.சிவக்குமார். பி.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி, நாமக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆ.சண்முகம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் (தெற்கு) ஏ.கே.முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story