தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை!

தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் நிறுத்தம் வேண்டி தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகள் இடையே போர் நிறுத்தம் வேண்டி தூத்துக்குடியில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி 50வது ஆண்டு விழாவில் 50 கோடி ஸலவாத் ஓதி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் செயல்பட்டு வரும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் மற்றும் மேற்காசிய நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் நீங்க அமைதி நிலவ வேண்டியும் உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ 50 கோடி ஸலவாத் ஓதி இறைவனிடம் அபூர்வ துஆ வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அஸ்ரார் அஹமது அனைவரையும் வரவேற்று பேசினார். பேராசிரியர் தாஜூத்தீன், கிராத் ஓதினார். அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், இமாம் சதக்கத்துல்லா,: ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் செய்யது அப்துல் ரகுமான், கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என கண்ணீர் மல்க அபூர்வ துஆ ஓதினார்.  ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, செயலாளர் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் இப்ராகிம் மூஸா, அரபிக் கல்லூரி பொருளாளர் சுலைமான், பேராசிரியர்கள் இஸ்மாயில், செய்யது அப்பாஸ், அப்துல் கனி, கிரசன்ட் பள்ளி செயலாளர் முஹம்மது, உவைஸ், பொருளாளர் பீர்முகமது அசிம், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஆடிட்டர் ஜூபைர், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏகே மைதீன் அர் ரகுமான் நற்செய்தி மன்ற செயலாளர் மிராஷா, பொருளாளர் முகமது குட்டி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தின் நன்றி கூறினார்.
Next Story