மாணிக்கநத்தம் ஊராட்சியில் பத்தாயிரம் பனை விதைகள் நடவு.
Paramathi Velur King 24x7 |10 Nov 2024 3:46 PM GMT
மாணிக்கநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காடு குட்டையில் ஊராட்சி மன்ற நிர்வாகம்-மாவட்ட வளத்துறை சார்பில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு.
பரமத்திவேலூர், நவ.10- பரமத்தி வேலூர் தாலுகா, மாணிக்கநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காடு குட்டையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது. மாணிக்கநத்தம் ஊராட்சியில் உள்ள பனங்காடு குட்டையில் பகுதியில் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். வன பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட வனச்சரக அலுவலருமான செந்தில்குமார், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாணிக்க நத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story