ராமநாதபுரம் விளையாட்டு தின விழா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |11 Nov 2024 8:26 AM GMT
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாணவர்களின் உடல் மேம்பாட்டிற்காகவும் விளையாட்டில் சாதனை புரிய அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் விளையாட்டு தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக ஜி. சந்தீஷ் ஐபிஎஸ் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சுனில் குல்ஹாரி பருந்து கப்பற்படை விமானத்தள அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் சிறப்பு விருந்தினர்கள்....தேசியக் கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.பின்னா் மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இவ்விழாவினைப் பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி இலட்சுமி அம்மா அவர்கள் தலைமை ஏற்க பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் துணை முதல்வர் திரு பாலவேல் முருகன் ஆகியோர் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர். தொடா்ந்து மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்த மாணவா்கள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி தொடா் ஓட்டமாக வந்து ஜோதியினை ஏற்றி வைத்தனா். பின்னா் தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தனிநபா் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களைச் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கி பாராட்டி ஊக்குவித்தனர். மேலும், மாஸ் ட்ரில், ஏரோபிக்ஸ் , ஜும்பா நடனம், சிலம்பம், மாணவர்களின் இசைக்கச்சேரி, மழலைச் செல்வங்களின் நடனம் வாயிலாக மாணவர்கள் நவரசங்களையும் காட்சிப்படுத்தி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
Next Story