ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்
Ramanathapuram King 24x7 |11 Nov 2024 8:37 AM GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் புதிதாக போடப்பட்டுள்ள ரோடு சேதமடைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் புதிதாக போடப்பட்ட ரோடு சேதம் அடைந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த கிராம மக்கள். மேலும் பழங்கோட்டையில் இருந்து கோட்டைதிடல் வரை மெட்டல் சாலை அமைக்க ரூ37லட்சம் செலவில் திருப்பாலைக்குடி ஊராட்சிமன்ற தலைவர் முகம்மதுஉமர்பரூக் அரசு பணத்தில் சாலை அமைத்துகொடுத்தார். இந்த சாலை அமைத்து இரண்டுமாத்திற்குள் பழுதடைந்து போக்குவரத்திற் பயனற்றமுறையில் உள்ளது. மேலும் முகம்மது உமர்பரூக் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், திமுகவின் நகர் செயலாளராகவும், ஆர். எஸ். மங்கலம் அவை தலைவராகவும் இருப்பதால் அரசியல் செல்வாக்குடன் வளம் வருவதால் இவர் எந்தத் திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கிராம மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் அவர்களிடம் மனு கொடுக்க வந்தனர்.
Next Story