காசியிலிருந்து சைக்கிளில் வந்த மிளகாயை உணவாக உண்ணும் வடநாட்டு சாமியார்
Komarapalayam King 24x7 |11 Nov 2024 11:34 AM GMT
மிளகாயை மட்டும் உணவாக உண்ணும் வடநாட்டு சாமியார் காசியிலிருந்து சைக்கிளில் குமாரபாளையம் வந்தார்.
காசியிலிருந்து சைக்கிளில் வந்த மிளகாயை உணவாக உண்ணும் வடநாட்டு சாமியார் மிளகாயை மட்டும் உணவாக உண்ணும் வடநாட்டு சாமியார் காசியிலிருந்து சைக்கிளில் குமாரபாளையம் வந்தார். இது குறித்து குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதியில் வசிக்கும் ஜீ.ஜீ. எனும் கொங்கனி சித்தரின் பக்தர் கூறியதாவது: நான் கொங்கனி சித்தர் பக்தன். சித்தர்கள் மீது பக்தி கொண்டவன். குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதியில் இடம் வாங்கி, அந்த இடத்தில் சித்தர்கள் வந்து தங்க ஏற்பாடு செய்துள்ளேன். இதனை இறைவன் அருளால் அறிந்து கொண்ட வட நாட்டை சேர்ந்த சித்தர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் வீடு தேடி வந்தார். இவரது பெயர் பாபுராம் சுவாமிகள். ஹிந்தி மட்டும் பேசுகிறார். இவரது உணவு, அதிகமாக பச்சை மிளகாய், சில நேரம் வேர்க்கடலை, பால் மட்டும் தான். வேறு எதுவும் சாப்பிடுவது இல்லை. எப்போது வருகிறேன் என்றும் சொல்ல மாட்டார். எப்போது போகிறார் என்றும் சொல்ல மாட்டார். அவராக சென்று விடுவார். போன முறை வந்த போது காசியில் இருந்து நடந்து வந்ததாக சொன்னார். இப்போது சைக்கிளில் வந்து உள்ளார். எதோ ஒரு பக்தர் கொடுத்து உள்ளார். நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி தருகிறார். இவ்வாறு அவர் கூறினார். குமாரபாளையம் பாசம் முதியோர் இல்லம் பற்றி கூறினேன். அங்கு வந்து அங்கு தங்கியுள்ள முதியவர்களை காண வந்து, அருளாசி வழங்கினார். நிறுவனர் குமார் உள்ளிட்ட பலர் சுவாமியை வரவேற்றனர்.
Next Story