அரசு பள்ளி மாணவனுக்கு. அறுவை சிகிச்சைக்கு உதவிய கலெக்டருக்கு பெற்றோர் நன்றி
Komarapalayam King 24x7 |11 Nov 2024 11:36 AM GMT
குமாரபாளையம் கூலித்தொழிலாளர்களின் மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த மாவட்ட கலெக்டருக்கு பெற்றோர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசிப்பவர்கள் தாமோதரன், யுவராணி தம்பதியர். விசைத்தறி கூலி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகன் சுந்தரேஸ், 12. சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். சின்னப்ப நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தும் பொழுது இவருக்கு பரிசோதனை செய்துள்ளனர் அப்போது இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர் கூறியுள்ளனர். இவர்களிடம் மருத்துவ காப்பீடு அட்டை இல்லை. ஆகையால் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கு மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சித்ராபாபுவிடம் உதவி கேட்டு வந்தனர். அவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் வசம் மாணவரின் உடல் நிலமையை பற்றி தெரியப்படுத்தினார். அவர் உடனே மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்தார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மாணவர் நலமுடன் உள்ளார். மருத்துவ உதவி செய்த கலெக்டர் உமாவிற்கு, பெற்றார், ம.நீ.ம. நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
Next Story