போக்குவரத்துகழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்
Nagercoil King 24x7 |11 Nov 2024 1:32 PM GMT
நாகர்கோவிலில்
தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு நாகர்கோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், ஒருங்கிணைப்பாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வறுமையில் வாடும் 95 ஆயிரம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளńகளின் வாழ்வாதாரம் மேம்பட 9 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைபடி உயர்வை உயர்நீதி மன்ற உத்தரவை உடனே அமல் படுத்தவும், 31-4-2023 முதல் 30-10-2024 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனே வழங்கவும், 15 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,கோர்ட் உத்தரவிட்டும் எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறவேற்றவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story