நாமக்கல் மக்களின் வசதிக்கேற்ப மூன்று புதிய வழித்தடங்களில் ஐந்து பேருந்துகள் இயக்கம் ராஜேஷ்குமார் எம்.பி தொடங்கி வைக்கிறார்.
Namakkal (Off) King 24x7 |11 Nov 2024 4:33 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி பயணங்கள் மேற்கொள்ளும் வகையில் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இன்று 12/11/24 காலை 9 மணி அளவில் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் முதல் வள்ளிபுரம் (பைபாஸ்) புறவழிச்சாலை வரை 2 பேருந்துகள் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை 2 பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் முதல் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை 1 பேருந்து என 5 புதிய வழித்தட பேருந்துகளின் இயக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.
Next Story