கரூரில்,தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |12 Nov 2024 11:54 AM GMT
கரூரில்,தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை - மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செம்மொழியான தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், சென்னை - மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தி, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழனியப்பன், கவிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், பல்வேறு தமிழ் அறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story