கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
Karur King 24x7 |12 Nov 2024 12:31 PM GMT
கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு . கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமை வேலை வைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குவதை குறைக்க வேண்டும், மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை தலையில் சுமந்து செல்வதை நிறுத்தி, வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு சென்றனர்.
Next Story