தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆய்வு
Nagercoil King 24x7 |12 Nov 2024 1:41 PM GMT
திற்பரப்பில்
கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு திட்ட பணிகளை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் இன்று (12-ம் தேதி) குமரிக்கு வந்துள்ளார். மாவட்டத்திலுள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உள்ளார். அந்த வகையில் முதலாவதாக திற்பரப்பு அருவி பகுதிக்கு வந்த அமைச்சர் அருவிப் பகுதி முழுவதும் ஆய்வு செய்ததோடு - அங்கு நடக்கும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் அது குறித்தான ஆலோசனையும் மேற்கொண்டார்.தொடர்ந்து ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உட்பட பல சுற்றுலா பகுதிகளை ஆய்வு செய்தார் அப்போது பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பல சுற்றுலா வளர்ச்சி சம்மந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர் இந்த ஆய்வுப் பணியின் போது அமைச்சருடன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் இவர்களுடன் தொண்டர்களும் உடனிருந்தனர்.
Next Story