ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
Andippatti King 24x7 |12 Nov 2024 4:09 PM GMT
ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு கவுன்சிலர்கள் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆண்டிபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆண்டிபட்டி தேர்வு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள ஊராட்சிகளின் சில பகுதிகளை தரம் உயர்த்தி நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து பேரூராட்சி அவசர கூட்டம் பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜோதி, செயல் அலுவலர் வினிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு கவுன்சிலர்கள் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Next Story