கரேத்தா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

X
Pallipalayam King 24x7 |13 Nov 2024 5:30 PM ISTபள்ளிபாளையத்தில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது
பள்ளிபாளையம் பகுதியில் இருந்து கோவாவில் கடந்த வாரத்தில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க 22 மாணவர்கள் சென்றனர். இந்த உலக அளவில் நடைபெற்ற போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர்கள் 15 தங்கப்பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வென்று சாதனை படைத்தனர். உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய வீரர்களுக்கு செவ்வாய்கிழமை அன்று பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன், மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்களும் பெற்றோர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்....
Next Story
