செல்போன் வெடித்து பெயின்டிங் தொழிலாளி உயிரிழப்பு

செல்போன் வெடித்து பெயின்டிங் தொழிலாளி  உயிரிழப்பு
இரணியல் அருகே
குமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளூர் பகுதி சேர்ந்தவர் பிரேம்குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு இன்று 13 ஆம் தேதி கிரகப்பிரவேசம் நடக்கிறது. வீட்டில் பெயிண்ட் வேலைக்கு நாங்குநேரி பகுதியை சேர்ந்த செல்வ சதீஷ் (25) ஏர்வாடி வெங்கடேஷ் (23) ஆகியோர் கடந்த 8-ம் தேதி வந்தனர். ரெண்டு பேரும் புதிய வீட்டில் பெயிண்டிங் வேலைகளை செய்து விட்டு அங்கே தங்கி இருந்தனர்.       இந்த நிலையில் இன்று கிரகப்பிரவேச நாளானதால் வேலையை முடித்து அவர்கள் இரண்டு பேரும் சரல் விளை பகுதியில் உள்ள பிரேம்குமாரின் உறவினர் வீட்டில் இரவு தங்கி உள்ளனர். அப்போது வெங்கடேசன் செல்வ சதீஷம் மது அருந்தி விட்டு, செல்வ சதீஷ் அறையிலும் வெங்கடேஷ் வெளியிலும் படுத்துள்ளதாக தெரிகிறது. இன்று காலை  சுமார் ஆறு மணி அளவில் வெங்கடேஷ் எழும்பி பார்த்தபோது செல்வ சதீஷ் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே இது தொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.       சம்பவ இடத்திற்கு குளச்சல் டிஎஸ்பி மற்றும் போலீசார்  விசாரணை நடத்தியதில். செல்வசதீஷ் படுத்திருந்த அறை முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி கிடந்தது. அதேபோன்று அவரது தலையணை அருகில் வைத்திருந்த செல்போன் வெடித்த நிலையில் கிடந்தது. இதை அடுத்து போலீசார் தடையவியல் துறைக்கு தகவல் தெரிவித்து தடைய இயக்குனர் வினிதா சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்.       தொடர்ந்து செல்வ சதீஷ் உடலை போலீசார் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்வ சதீஷ் மதுபோதையில் புகை பிடித்து விட்டு சிகரெட் துண்டு படுக்கையில் போட்டதில்  இறந்தாரா?  அல்லது செல்போன் வெடித்து இருந்தாரா?  என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story