காளிபாளையத்தில் கணவன் இறந்ததால் மனநலம் பாதித்த பெண் மாயம்.
Karur King 24x7 |13 Nov 2024 1:38 PM GMT
காளிபாளையத்தில் கணவன் இறந்ததால் மனநலம் பாதித்த பெண் மாயம்.
காளிபாளையத்தில் கணவன் இறந்ததால் மனநலம் பாதித்த பெண் மாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, பஞ்சமாதேவி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி வயது 54. இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அந்த அதிர்ச்சியில் மனநலம் பாதித்த லட்சுமி விரக்தியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், லட்சுமியின் சகோதரர் மனோகரன் வயது 52 என்பவர் இதுகுறித்து தனது சகோதரியை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story