பரமத்தியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

பரமத்தியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
பரமத்தி யில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ சேகர் தலைமையில் நடைபெற்றது
பரமத்திவேலூர்,நவ.13- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில்  பரமத்தி ஒன்றியம் வடக்கு, தெற்கு, பரமத்தி பேரூராட்சி  மற்றும் வேலூர் பேரூராட்சி அ.தி.மு.க  செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வெற்றிவேல், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவி‌, பரமத்தி நகர கழக செயலாளர் சுகுமார், வேலூர் நகர கழக செயலாளர் பொன்னி வேல் என்கிற வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் சப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கடுமையாக உழைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் 210 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் தனசேகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரம் தமிழரசி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் ,மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் வேலூர் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரஜாக் நன்றி கூறினார்.
Next Story