குழந்தைகள் தின விழா நடைபெற்றது

X
Pallipalayam King 24x7 |14 Nov 2024 4:27 PM ISTதனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது
பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. JRC மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றனர். பள்ளியின் முதல்வர் I.ராஜேஷ் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் C.N..ராஜா குழந்தைகள் தின சிறப்புகள் குறித்து பேசினார். பள்ளியின் செயலாளர் நந்தி C மோகன் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக காவல்துறை துணை ஆய்வாளர் செல்வி பிரியதர்ஷினி கலந்துகொண்டு போக்சோ சட்டம் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் மாணவர்கள் கைப்பேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக பேசினார். மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டியில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியை பத்மாவதி தனி நடிப்பு மற்றும் நடனம் மூலமாக மாணவர்களை மகிழ்வித்தார். உயிரியல் ஆசிரியர் மணிகண்டன் நன்றியுரை கூறினார்.
Next Story
