சத்தியமங்கலம் அருகே உள்ள பஸ் நிலையம் முன் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

X
சத்தியமங்கலம் அருகே உள்ள பஸ் நிலையம் முன் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம், சத்தியில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் சென்னையில் அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தி பஸ் ஸ்டேன்டு முன் கண்டித்து ஐஎம்ஏ தலைவர் டாக்டர். ஜாவித் இப்ராஹிம், செயலாளர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அங்கிருந்து தாலுக்கா ஆபீஸ் சென்று தாசில்தார் சக்திவேலிடம் மனு அளித்தனர்
Next Story

