அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன்.
Namakkal (Off) King 24x7 |14 Nov 2024 5:05 PM GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மக்கள் தொடர்பு முகாமில் 233 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், காடச்சநல்லூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் 233 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களை எளிதாகவும், விரைவாகவும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குழந்தைகள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் பயன்பெறும் வகையில் ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை மக்களுக்கு வீடு கட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.06 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயக்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் ரூ.5,740/- மதிப்பில் காதொலிக்கருவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 5 நபர்களுக்கு ரூ.1.68 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை துறை சார்பில் 6 விவசாயிகளுக்கு ரூ.1,651/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.2.05 இலட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள், கூட்டுறவு துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.90,000/- மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன், 18 விவசாயிகளுக்கு ரூ.15.84 இலட்சம் மதிப்பில் பயிர்க்கடன் மற்றும் ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன், மகளிர் திட்டம் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.11,276/- மதிப்பில் தையல் இயந்திரம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.18.50 இலட்சம் மதிப்பில் சுய தொழில் கடனுதவி, தோட்டக்கலை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.52,950/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், முன்னோடி வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3.91 இலட்சம் மதிப்பில் கடனுதவி, 25 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், தொழிலாளர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.27,800/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 3 நபர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அடையாள அட்டைகள், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் வீ.சகுந்தலா, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.ஈ.மாரியப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story