கந்திலி அருகே சாலை மறியல்

கந்திலி அருகே சாலை மறியல்
கந்திலி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் பல்லலப்பள்ளி பகுதியில் 35 வருட காலமாக இருந்த தொலைக்காட்சி அறையை ஊராட்சி மன்ற தலைவர் இடித்ததன் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிழக்கு வதனவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்லலப்பள்ளி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின வகுப்பை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் என்பவர் நியாய விலை கடை அமைக்க 35 வருட காலமாக இருந்த தொலைக்காட்சி அறையை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூரிலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த கந்திலி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூரிலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story