அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருதுகள்
Komarapalayam King 24x7 |15 Nov 2024 7:36 AM GMT
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருதுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் ஏற்பாட்டில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வரும் மாணவ, மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அமைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஆயிரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வள மையம் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருது என்ற பெயரிலும், ஆசிரியர்களுக்கு இயற்கை நேசர் விருது என்ற பெயரிலும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் குமாரபாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைபள்ளி மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைபள்ளி நாராயணநகர், நகராட்சி துவக்கப்பள்ளி ஜே.கே.கே.சுந்தரம்நகர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி, தர்மதோப்பு வாசுகிநகர் ஆகியவற்றில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளர் தங்கவடிவேல் பங்கேற்று, விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பேசும் பொழுது, மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி பருவத்தில் இருந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், இதன்மூலம் *நமது உடல் நலத்தை பேணிக்காப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். மேலும் மாணவ-மாணவிகள் செடி மற்றும் மரங்களின் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களையும் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இனிவரும் நாட்களில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்போம், இயற்கைச் சூழலையும் மேம்படுத்துவோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொருளாளர் வரதராஜன், செயலர் பிரபு, உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story