ரயில்வே பாலத்திற்கு கீழே டூவீலரில் வேகமாக சென்றவர் கீழே விழுந்து விபத்து.
Karur King 24x7 |15 Nov 2024 7:54 AM GMT
ரயில்வே பாலத்திற்கு கீழே டூவீலரில் வேகமாக சென்றவர் கீழே விழுந்து விபத்து.
ரயில்வே பாலத்திற்கு கீழே டூவீலரில் வேகமாக சென்றவர் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், கோயம்பள்ளி அருகே உள்ள செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் வயது 27. இவர் நவம்பர் 13ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் அவரது டூவீலரில் 5 ரோடு பகுதியில் உள்ள ரயில்வே பாலத்துக்கு அடியில் செல்லும் போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, கரூரில் உள்ள ஜி சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சங்கரின் சகோதரர் மோகன் வயது 32 என்பவர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதை ஆகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story