காமாட்சிபுரத்தில் லாரி - டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதல். ஒருவர் உயிரிழப்பு.

காமாட்சிபுரத்தில் லாரி - டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதல். ஒருவர் உயிரிழப்பு.
காமாட்சிபுரத்தில் லாரி - டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதல். ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கஸ்தூரி குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் வயது 27. லாரி டிரைவர். இவர் நவம்பர் 14 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் தரகம்பட்டியில் இருந்து பால விடுதி செல்லும் சாலையில் அவரது லாரியை ஓட்டிச் சென்றார். இவரது லாரியில் கடவூர் தாலுகா, பாலவிடுதி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் வயது 39. உடன் சென்றார். இவரது லாரி காமாட்சிபுரம், தூளிப்பட்டி பிரிவு அருகே சென்ற போது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா,பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம், சுந்தர்ராஜ் ஓட்டிச் சென்ற லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுந்தர்ராஜ் மற்றும் தர்மராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த தர்மராஜன் மனைவி காளியம்மாள் வயது 35 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த தர்மராஜன் உடலை உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, tata ace வாகனத்தை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தினேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.
Next Story